🛕 Arulmigu Kailasanathar Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், Valuthoor - 614210

📜 About this temple

திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய பெரியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் பற்றி யாருக்காவது தெரியுமா? இவர்களை தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் "முருகன், கந்தன், கார்த்திகேயன்' என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு "மூத்த திருநாவுக்கரசு', இளையவனுக்கு "இளைய திருநாவுக்கரசு' என்று. தன்னை விட தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).