📜 About this temple
திருமூலர் அவதரித்த சாத்தனூர்: திருக்கயிலாயத்தில் இருந்து யாத்திரையாக பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்த சிவனடியார் ஒருவர், காவிரிக் கரையோரம் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்கே, மேயச்சலுக்கு வந்த பசுக்கள், ஓரிடத்தில் பெருங் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அருகில் வந்து பார்த்தால் சிவனடியாருக்கு அதிர்ச்சி... எல்லாப் பசுக்களின் கண்களிலிருந்து கரகரவென வழிந்துக்கொண்டிருந்தது நீர்!இன்னும் அருகே வந்த சிவனடியார், பசுக்களின் கூட்டத்துக்கு நடுவே எட்டிப் பார்த்தார்; அதிர்ந்து போனார். அங்கே, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தவன், ஏதோ விஷ ஜந்து தீண்டி இறந்து போயிருந்தான். ஐந்தறிவு உயிர்கள், வாயில்லா ஜீவன்கள் இந்தப் பசுக்கள். இத்தனை நாளும் தங்களைத் தொட்டுத் தடவிக் குளிப்பாட்டியவன், தங்கள் பசியறிந்து உணவு கொடுத்தவன், காடு - மேடுகளைக் கடந்து கவனமாகவும் கரிசனத்துடனும் மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தவன், இருள் கவியத் துவங்கியதும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இப்பிடத்துக்கு அழைத்துச் சென்றவன் இறந்துக்கிடக்கிறானே...! என அந்தப் பசுக்கள் கலங்குவதை உணர்ந்து சிலிர்த்தார் சிவனடியார். நெற்றியில் விபூதி பூசியிருக்கிறான்; கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறான், நம்மைப் போலவே இவனும் சிவபக்தியில் திளைத்தவன்போல.. என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பசுக்கள் இறந்துகிடந்த தங்கள் மேய்ப்பனையும் வந்திருக்கும் சிவனடியாரையும் மாறி மாறிப் பார்த்தன. இவனது ஆத்மா சாந்தியடையட்டும். நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்து அந்தச் சிவனடியார் உரக்கச் சொன்னதும், மாடுகளின் உடலில் மெல்லிய அசைவு தெரிந்தது. அதனைக் கவனித்த சிவனடியார், இதோ... இறந்து கிடப்பவன் கூட அடிக்கடி நமசிவாயம், நமசிவாயம் என்ற சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பான்போல! என்று யோசிக்கும்போதே, இருள் கவியத் துவங்கியது. மாடுகள், அடிவயற்றிலிருந்து குரல் எழுப்பின. அந்தக் குரலில் ஒருவித சோகமும் பயமும் தெரிந்தது. அப்போது, அந்தச் சிவனடியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கேயுள்ள மறைவான இடத்துக்குச் சென்றார்; புல்தரையில் அப்படியே படுத்துக்கொண்டார். கண்கள் மூடினார்; உயிரின் மையப் புள்ளியை உற்றுக் கவனித்தார்; இன்னும் கூர்ந்து கவனிக்க, அது அசைந்தது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நகர்ந்தது; சட்டென்று உடலிலிருந்து நழுவி வெளியேறி, மேய
திருமூலருக்கு இறைவன் இத்தலத்தில் காட்சி கொடுத்தார் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).