📜 About this temple
கவுரவ குலத்தினர் என்னும் கவரைச் செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர்கள், பரம்பரை பரம்பரையாகக் கண்ணாடி வளையல்களை வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் சொந்த ஊர் திருநறையூராக இருந்தாலும், குதிரைமேல் மல்லாரம் வைத்து வளையல் சாரங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வளையல் வியாபாரிகள் சமயபுரத்துக்கு வந்து அம்மனை வழிபட்டார்கள். வளையல்கள் கொண்ட சாரங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்றார்கள். மாலை நேரம் கடந்து, இரவு வந்தது. இரவு இங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லலாம் என்று சமயபுரம் கோயிலருகிலுள்ள ஒரு மண்டபத்தில் தன்னுடன் வந்த வளையல் வியாபாரிகளுடன் தங்கினார் வயதான வளையல் வியாபாரி ஒருவர். நல்ல உறக்கம். நடு இரவில் மண்டபத்தில் படுத்திருந்த வளையல் வியாபாரியான பெரியவர் கனவில், இளம்பெண்ணாக வந்தாள் சமயபுரத்தாள். தாத்தா, எனக்கு வளையல்கள் போட்டு விடுகிறீர்களா ? என்றாள். தெய்வீகக் களைவீசும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும், உனக்கு இல்லாத வளையல்களா? எல்லாம் உனக்குத்தாம்மா. இப்படி உட்கார் என்று தான் கொண்டு வந்திருந்த சிறிய ஜமுக்காளத்தை விரித்து, வளையல்களை அடுக்கி, வைத்திருந்த பெட்டியையும், வளையல் சாரம் கொண்ட மூட்டையையும் எடுத்து அந்தப் பெண்முன் வைத்தார். அந்தப் பெண் அமர்ந்தது, வளையல் வியாபாரி அந்த அழகான கைகளுக்கு ஏற்ற வண்ணமயமான கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து, அந்தப் பெண்ணின் கைகளில் அணிய முற்படும்போது, வளையல்கள் ஒடிந்துகொண்டே வந்தன. இது அவருக்கு அதிசயமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அவர் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணோ, சிரித்துக்கொண்டே பெரியவர் முகத்தைப் பார்த்தாள். அவரோ, வளையல்களைஅந்தப் பெண்ணுக்கு அணிவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். அம்மா, என்னவென்றே தெரியவில்லை ! ஆத்தா என்னைச் சோதிக்கிறாள் என்று நினைக்கிறேன். நீ யார் அம்மா? என்று பணிவுடன் கேட்டார். அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து, கோயிலை நோக்கிச் சென்றாள். அவரோ, அந்தப் பெண் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார். கனவிலிருந்து விடுபட்டு திடுக்கெனக் கண்விழித்த பெரியவர், தான் கண்டது கனவா என்றவாறே, வளையல்களை அடுக்கி வைத்திருந்த பெட்டியையும் வளையல்கள் கொண்ட சாரத்தையும் அவசரம் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம்
இங்கு சமயபுரத்தாள், திருவுருவம் இல்லாமல் எல்லையம்மனாக எழுந்தருளி அருள்புரிவது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).