📜 About this temple
உமையவளின் மூலமாக பசுபதிநாதரான சிவபெருமான், பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத் தார். நான்கு வேதங்களின் கருத்துக்களையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களை பந்தாடி, மேலும் கீழுமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள். வேதக்கோள்கள் பெரும் ஒளிமிக்கவையாகத் திகழ்ந் தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில், அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப் போல் சுருங்கி விட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்த கோள்களை பந்தாடி விளையாடுவதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக் கத்திலும், தான் மறையும் நேரத்தை சூரியன் தள்ளி வைத்தான். இதனால், சகல லோகங்களிலும் சாயங்கால பூஜைகள் ஸ்தம்பித்து விட் டன. சூரிய அஸ்தமன நேரம் மாறியது கண்டு கோபமடைந் தது போல் நடித்த சிவபெருமான், அம்பிகையின் முன் நேரில் வந்தார். அம்பிகை அந்த கோபம் கண்டு ஒதுங்கி நின்றாள். அப்போது நான்கு வேதக் கோள்களும் அப்படியே வானில் அந்தரத்தில் நின்று விட்டன. அம்பிகையை அழைத்த சிவன், ""உன் விளையாட் டால் சூரிய அஸ்தமனம் தள் ளிப் போனது. உலக இயக்கம் ஸ்தம்பித்தது. எனவே, நீ பூலோகம் செல்ல வேண்டும். பசு வடிவில் தங்க வேண்டும். நீ வேதப்பந்துகளை உதைத்ததால், உன் கால்கள் வேதசக்தி பெற்றுள்ளன. பசுவாக மாறும் நீ பூலோகமெங்கும் சென்று அந்த வேதசக்தியைப் பரப்ப வேண்டும்,'' என உத்தரவிட்டார். ""பூமியெங்கும் நடந்தே போய், எப்படி வேதசக்தியை பரப்ப முடியும்? இது சாத்தியமற்ற செயலாயிற்றே,'' என ஐயம் கொண்ட அன்னை, தன் சகோதரன் திருமாலை துணைக்கழைத்தாள். அவர் வேதத்தை வராக வடிவில் தன் மூக்கில் தாங்கியவர். நந்தகோபாலன் என்ற பெயரில் அம்பிகையுடன் பூமிக்கு வந்தார். அம்பிகை பாதம் பட்ட இடமெல்லாம் வேதசக்தி பரவியது. அம்பிகை பூமிக்கு வந்த போது, முதன் முதலில் கால் பதித்த இடமே இன்றைய நெய்க்குப்பை கிராமம்.
ஆவணி 19, 20,21 தேதிகளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகிறது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).