🛕 Arulmigu Gowmariamman Temple

அருள்மிகு கௌமாரிஅம்மன் திருக்கோவில், தென்கரை, பெரியகுளம் - 625601
🔱 Gowmariamman

📜 About this temple

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மன், தற்போதைய பெரியகுளம் நகரின் கிழக்கே இருந்த காட்டிற்குள் கோயில் கொண்டிருந்தாள். அச்சமயத்தில் அதிக மழையால் ஊரில் உள்ள கண்மாயில் நீர் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் மூழ்கி மக்கள் சிரமப்பட்டனர். இதை தவிர்க்க காட்டு மாரியம்மனை பக்தர்கள் மனம் உருகி வணங்கினர். அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன் ஊரின் எல்லையில் அமைந்து, ஊரை நோக்காமல் புறத்தை நோக்கியபடி தாம் அமைந்திருப்பதாலேயே இவ்வாறு சேத நிகழ்வுகள் நடப்பதாக உணர்த்தினாள். அதன்பின், பொதுமக்கள் அனைவரும் மாரியம்மன் வீற்றிருந்த காட்டுப்பகுதியை சீரமைத்து அங்கே இடம் பெயர்ந்தனர். அதன் பின் அம்மனின் அருளால் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அத்துடன் அம்மனுக்கு கோயில் கட்டி "கவுமாரி' என அழைக்க தொடங்கினர்.

இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).