🛕 Arulmigu Mavootru Velappar Temple

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் கடமலைக்குண்டு கிராமம், ஆண்டிபட்டி - 625512
🔱 Mavootru Velappar

📜 About this temple

பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியாக உள்ள இப்பகுதியில் வசித்து வந்த பழியர் இனத்தவர்கள் வள்ளிக்கிழங்கினை பயிரிட்டு அதனை தமது உணவாக உண்டுவந்தனர். ஒருமுறை, அவர்கள் தற்போது கோயிலில் வேலப்பர் எழுந்தருளியுள்ள பகுதியில் முளைத்திருந்த வள்ளிக்கிழங்கினை தோண்டினர். அதிக ஆழத்திற்கு தோண்டியும் அக்கிழங்கினை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டும் நீண்ட தூரம் சென்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோண்டிய அவர்கள் வேரில் முடிவில் வேலப்பர் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர். பின், அவர்கள் இப்பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைக் கூற, பிற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இத்தல வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இப்பகுதியில், கோயிலுக்கு தெற்கே உள்ள ஓர் மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாக பொங்கிக்கொண்டே இருக்கிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).