🛕 Arulmigu Meenakshi Sundareswarar Temple

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில், ஆண்டிபட்டி - 625512

📜 About this temple

இந்த பூமியில் ஆன்மிக சக்தியை அதிகப்படுத்துவதற்காக சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில் பல சிவத்தலங்களை தரிசித்திருந்தாலும், மதுரை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். எனவே இவர்கள் நினைத்த போதெல்லாம் அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க விரும்பினர். பாண்டியர்களின் தலைநகராக மதுரை விளங்கியதால், இரவும் பகலும் மக்கள் நடமாட்டத்துடன் இருந்தது. இதனால் சித்தர்களால் மதுரையில் அமைதியாக தங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலவில்லை. எனவே இவர்கள் மதுரைக்கு அருகில் அமைதியான சூழ்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இருப்பதை அறிந்தனர். உடனே அவர்கள் ஆண்டிகள் கோலத்தில் அங்கு சென்று தங்கி, தியானம் செய்வது, சிவபூஜை செய்வது என்ற சிவத் தொண்டில் ஈடுபட்டனர். அத்துடன் தாங்கள் விரும்பிய நேரத்தில் எல்லாம் மதுரைக்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வந்தனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், இத்தலத்திற்கு ஆண்டிபட்டி என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.

சூரியனும் சந்திரனும் இங்கு அருகருகே அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது.எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். எனவே இத்தலத்தை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம். இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்' என்பதாகும். இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும். பழநி திருவாவினன்குடியைப் போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும். பொதுவாக தட்சிணாமூர்த்தி பாதத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வர் அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள "வீராசன தட்சிணாமூர்த்தி' பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை மிகவும் அரிதாகவே தரிசிக்க முடியும். இங்கு சிவனின் பின்புற கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவரின் அருகே பிரம்மா, விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயிலிலும் காணலாம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).