🛕 Arulmigu Suruli Velappar Temple

அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, சுருளிப்பட்டி - 625516

📜 About this temple

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், "சுருதி' எனப்பட்ட தீர்த்தம், "சுருளி' என மருவியது. முருகனுக்கும் "சுருளி வேலப்பர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், "சுருளியாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார். ராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக்காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள்,சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.

இத்தலத்தில் முருகன் குகைக்கோயிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).