📜 About this temple
தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற தகவல் புதுமையானதாகவே உள்ளது. மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர். கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.
"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).