🛕 Arulmigu Azhagiya Mannar Rajagopalasamy Temple

அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், Palayamkottai - 627002

📜 About this temple

இந்திரனுக்கு அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்தனர். ஒருசமயம், அர்ஜுனன் இந்திரலோகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கு சென்ற தன் மகனிடம் இந்திரன், ""அர்ஜுனா! கடலுக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருக்கிறது. அங்கே, மூன்றுகோடி அசுரர்கள் வசிக்கின்றனர். அவர்கள் 14 லோகங்களிலும் உள்ள நல்லவர்களை வதைத்து வருகின்றனர். நீ அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழிக்க வேண்டும்,'' என்றான். அர்ஜுனனும் போருக்குச் சென்றான். அவர்களை அழிப்பது அவ்வளவு சுலபமாகஇல்லை. கொல்லப்பட்ட அசுரர்கள் மீண்டும் எழுந்து நின்றனர். அப்போது வானத்தில் இருந்து அர்ஜுனனின் காதில் ஒலித்த அசரிரீ, ""அந்த அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ கொல்ல முடியும்,'' என்றது. உடனே அர்ஜுனன், தோற்று ஓடுவது போல நடித்தான். அச்சமயத்தில் அசுரர்கள் கேலி செய்ய, அர்ஜுனன் தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை எய்து அவர்களைக் கொன்று விட்டான்.இந்த வீரச்செயலை பாராட்டிய இந்திரன், அதற்கு கைமாறாக தான் வணங்கிவந்த கோபால சுவாமியின் சிலையை அர்ஜூனனுக்கு வழங்கினான். சிலநாட்கள் கழித்து, அர்ஜூனனின் கனவில் தோன்றிய கண்ணபிரான், இந்திரனால் உனக்கு வழங்கப்பட்ட என் சிலையை கங்கைநதியில் இடு,'' என்றார். அர்ஜுன னும் அப்படியே செய்தான். அப்போது, கங்கையில் நீராட சென்றிருந்த, தென்பாண்டி நாட்டை ஆட்சிசெய்த ஸ்ரீபதி மன்னன் மிதந்து வந்த சிலையை எடுத்து வந்தான்.அதை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அழகிய ராஜகோபாலன் என பெயர் சூட்டினான்.

இக்கோயில் தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து கட்டப்பட்டுள்ளது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).