📜 About this temple
அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ‘சுயம்பு’ என்றால் ‘தானாகத் தோன்றுவது’. சுவாமிக்கும் சுயம்புலிங்கநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது. அம்பாளை பிரம்மசக்தி என்பர்.இதையடுத்து, பக்தர்கள் ஏராளமாக அங்கு வர ஆரம்பித்தனர். அவர்களது வேண்டுதல்கள் பலிக்க ஆரம்பித்தன. இதையடுத்து பெரிய கோயில் உருவானது. இவ்வூரை ‘வீரைவளநாடு’ என்றும் அழைப்பர். கோபுர திருப்பணி: இந்தக் கோயிலில், 108 அடி உயரத்திற்கு, ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் திருப்பணி நடந்து வருகிறது. கோபுர தரிசனமே கோடி நன்மை என்னும் போது, கோபுரம் கட்டும் பணியில்ஈடுபட்டால் மிகுந்தபுண்ணியம் கிடைக்கும்என்பதில் சந்தேகமில்லை. திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர் 99625 69495, 93847 28151, 94437 22885 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).