🛕 Arulmigu Venkatachalapathi Temple

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம் - 627011
🔱 Venkatachalapathi

📜 About this temple

16ம் நூற்றாண்டுக் கோயில் இது. கோயிலுக்கென்று புராண வரலாறு ஏதும் இல்லை என்றாலும் மிகச் சிறந்த சிற்ப கலைக் கூடமாக திகழ்கிறது. சிற்பி ஒருவன் பாறையை பார்க்கிறான்.அப்பாறையில் இயற்கையாக செந்நிற ரேகைகள் ஓடுவதை காண்கிறான். அந்த பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடுகிறது.அவன் எண்ணத்தில் உருவான கற்பனை கதை எழ அதில் தன் உளி வேலையை காட்டுகிறது. பாறையைக் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் இரத்தப் பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது.அந்த சிலை வடிவை தூணாக நிறுத்தி விடுகிறான் சிற்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்ததுதான் கிருஷ்ணாபுரத்து கோயில் சிற்பங்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

இங்குள்ள சிற்பங்கள் உலக அளவில் புகழ்பெற்ற சிற்பங்களாக விளங்குவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).