📜 About this temple
பழநிமலைத் தொடர்களுள் உள்ளது முதிரமலை எனும் மலை. இம்மலையில் அமைந்த முதிரம் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். குறுநில மன்னரான குமணன். இவர் கடையேழு வள்ளல்களின் காலத்திற்கு பிறபட்டவர் எனவும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் உள்ள பகுதி குமண மங்கலம் என வழங்கப்பட்டது. இப்பெயர் மன்னர் குமணின் பெயரால் விளங்கியது. நல் ஆட்சி நலத்தாலும் தோளாற்றலாலும் செல்வ செழிப்புடன் விளங்கிய அப்பகுதி அமராவதி ஆற்று பாசனத்தால் சுற்றுப்புறமெங்கும் பசுமையான வயல் வெளிகளுடன் செழித்து வளமாகத் திகழ்ந்தது. இப்பகுதியை ஆண்ட மன்னன் குமணன் காசியாத்திரை செல்லும்போது தன்னுடன் வர விருப்பமானவர்களையும் அழைத்துச் செல்வார். அப்படிச் சென்று வந்த பின்பு மன்னன் மனதில் சில கேள்விகள் எழுந்தன. நமக்குப் பிறகு இம்மக்களை யார் காசிக்கு அழைத்துச் செல்வர்? தனக்கு பின் ஆட்சிக்கு வரும் மன்னர்கள் இவ்வாறு அழைத்துச் செல்வார்களா? மகளிர், குழந்தைகள், முதியவர்கள் காசிக்கும் செல்ல வழிவகையில்லையே? என சிந்தித்தார். அமைச்சர் பெருமக்களுடன் ஆலோசனை நடத்தினார். நீண்ட ஆய்வுக்கு பின் காசியில் இருந்து சிவலிங்கத்தைக் கொண்டுவந்து ஓர் கோயில் அமைக்க முடிவு செய்தார். காசியில் உள்ள அமைப்பைப் போன்றே இருக்க வேண்டும் எனத் தெரிவித்து இடத்தைத் தேர்வு செய்ய உத்தரவிட்டார். பல்வேறு இடங்களை பார்வையிட்டு இறுதியில் தற்போது கோயில் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்தனர். கோயில், ஆறு அதை அடுத்து மயானம் என உள்ளதைப் போன்ற இவ்விடம் காசியில் உள்ளதை ஒத்திருந்ததால் இதனை தேர்வு செய்தனர். காசியிலிருந்து காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தைக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. கோயில் கட்டிட பணிகள் ஒரு நல்ல நாளில் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. காசியில் உருவாக்கிய லிங்கம் வண்டி மூலம் பயணித்து குமண மங்கலத்தை அடைய ஒரு ஆண்டுகாலம் பிடித்தது. பரிவார தெய்வங்களுக்கும் விசாலாட்சி அம்மனுக்கும் தனிச் சன்னிதிகள் அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தேறியது. குமணன் காசியிலிருந்து லிங்கத்தை வரவழைத்து பிரதிஷ்டை செய்ததால் இவ்வூரின் பெயர் குமண லிங்கம் என்றாகி பின் காலப்போக்கில் மருவி கொமரலிங்கம் என நிலைபெற்றுவிட்டது. படம், தகவல் : வி.பி. ஆலால சுந்தரம், கோவை
பொதுவாக அதிகார நந்தி வாசலிலும் அனுகிரஹ நந்தி மகா மண்டபத்திலும் வீற்றிருப்பார். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இரு நந்திகளும் மகா மண்டப வாசல் முன்னே வீற்றிருப்பது விசேஷமான அம்சம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).