📜 About this temple
கிருஷ்ண பரமாத்வால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவரை அழிக்க பல யுக்திகளைக் மேற்கொண்டான். ஆனால், அவனால் கிருஷ்ணரை நெருங்கக்கூட முடியவில்லை. ஒருகட்டத்தில் பூதனை என்ற அரக்கியை தந்திரமாக அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரிடம் சென்றாள். அவரைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினாள். வந்திருப்பது அரக்கி என்று தெரிந்தும், ஒன்றும் தெரியாதவர் போல கிருஷ்ணர் நடித்தார். பூதனை அவரை தன் மடியில் வைத்துக் கொண்டு, பாசமுடன் தாய் போல நடித்து பால் கொடுத்தாள். கிருஷ்ணரும் பால் அருந்துவது போல நடித்து, அவளை வதம் செய்தார். இதனால், கிருஷ்ணருக்கு பூதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வடிவத்தில் சுவாமிக்கு இங்கு ஒரு மன்னர் கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் வழிபாடு மறைந்து, கோயிலும் மறைந்து போனது. பல்லாண்டுகளுக்கு பின், இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சுவாமி, தான் மண்ணிற்கு அடியில் புதைந்திருப்பதை உணர்த்தினார். அதன்படி, இங்கு சுவாமி சிலையைக் கண்ட பக்தர், அவர் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினார்.
இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).