📜 About this temple
அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அசுர சகோதரர்களின் தொந்தரவிற்கு ஆளான தேவர்கள், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் அசுரர்களை அழிக்க, பார்வதி, மகாவிஷ்ணு இருவரையும் அனுப்பினார். மகாவிஷ்ணு வயோதிகர் வடிவம் எடுத்தும், . பார்வதி அவரது மகள் போலவும் அசுரர்களின் இருப்பிடம் வந்தனர்.அம்பன் பார்வதியின் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள விரும்பி, முதியவரிடம் பெண் கேட்டான். அம்பாசுரனும் அவளை மணக்க விரும்பினான். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, ""உங்களில் யார் சக்தி மிக்கவரோ அவரே என் பெண்ணை மணந்து கொள்ளட்டும்,'' என்றார். இதனால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அம்பாசுரனை அம்பன் கொன்று விட்டான்.அப்போது பார்வதி காளியாக உருவெடுத்து அம்பனையும் வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) ஏற்பட்டது. இதனால் சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, பிரம்மஹத்தியை விரட்டியடித்தார். அவர் "அகோர வீரபத்திரர்' என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவபெருமானும் மகாகாளர் என்ற பெயரில் இங்கு தங்கியுள்ளார்.
வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. தந்தை, மகள் வழிபாட்டு தலம்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).