🛕 Arulmigu Maruthavaneswarar Temple

அருள்மிகு மருதவனேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம், நன்னிலம் - 609503
🔱 Maruthavaneswarar

📜 About this temple

1000-1500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கோயில் அமைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் காடு சூழ்ந்து இருந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கால்நடைகள் காணாமல் போன போது தேடி சென்ற நிலையில் காட்டில் லிங்கம் மட்டும் தெரிந்துள்ளது. அதன் பின் அப்பகுதியினர் காடுகளை அழித்து பார்த்த போது கோயில் இடிந்து லிங்கம் இருப்பது தெரிந்தது. அதன் பின் கோயில்கட்ட முன் வந்த நிலையில் மஞ்சக்குடி ‘சுவாமி தயானந்த சரஸ்வதி’ அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் கோவை தடாகம் ஜெகநாதசுவாமி மூலம் ஆலோசனை பெற்று இக்கோயில் ஈசன் முக்தியை வென்றவர் என கண்டறியப்பட்டு எம பயம் போக்க முக்தீஸ்வரர் என்ற பெயர் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் மிருத்யுஞ்ஜயேஸ்வரர் பெயர் சூட்டி கோயில் கட்டும்பணி துவங்கியது. சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி அவர்கள் முயற்சியா லும், ஸ்ரீராம் குழுமம் கண்ணன் அவர் புதல்வர் மணி ஆகியோர் மூலம் பொருளதவி செய்து, புதிதாக கோயில் கட்டும் பணி முடிந்து கடந்த 2013 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தம்பி சீனிவாசன் அவர்களின் பராமரிப்பில் கோயில் செயல்படுகிறது.

மூலவர் தவிர்த்து இங்குள்ள பிற விக்கிரஹங்களுக்கு புதிதாக பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மூவலருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).