📜 About this temple
முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, நான் எப்பொழுதும் தங்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கிணங்கிய மகாவிஷ்ணு, கலியுகத்தில், கடத்துவாரபுர ÷க்ஷத்திரம் எனப்படும் திருக்குடவாயில் தலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அனுக்ரகம் செய்கிறேன் என்று கூறினார். அதன்படியே தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசராக - திவ்ய மங்கள விக்ரக வடிவில் பூமிக்கடியில் எழுந்தருளினார். இந்நிலையில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, இங்கே ஒரு வைணவ ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தன்னுடன் வந்திருந்த வேத பண்டிதர்களுடன் ஆலோசனை செய்தார். பூமி பூஜை செய்து முதலில் குளம் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், ஒரு வைணவ அன்பரின் கனவில் தோன்றிய திருப்பதி ஏழு மலையான், குளம் வெட்ட நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் - ஈசான்ய பாகத்தில் தேவி, பூதேவியுடன் விக்ரகமாக நான் பூமிக்கடியில் உள்ளேன். பாலை ஊற்றி மண்ணைக் கரைத்து விக்ரகத்தை சேதப்படுத்தாமல் வெளியில் எடுத்து, எளிமையாக கோயில் கட்டி வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள். திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்னும் சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக ஒப்பிலியப்பன் கோயிலும்; தம்பி என்ற சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக இந்த குடவாயில் கோயிலும் பிற்காலத்தில் சிறப்பு பெறும் என்று கூறி மறைந்தார். கண்விழித்த அந்த அன்பர் ஓடிச்சென்று கிருஷ்ண தேவராயரிடம் தான் கண்ட கனவைக் கூற, அதிசயித்த மன்னன் குடம் குடமாகப் பால் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பின்னர் சுபமுகூர்த்தத்தில் பூமிபூஜை செய்து, பொன் ஏர் பூட்டி ஈசான்ய பாக நிலத்தை உழத் தொடங்கினர். ஓரிடத்தில் ஏர் தடைப்பட்டு நின்றது. அந்த இடத்தில் குடங்களிலிருந்த பாலை ஊற்றச் சொன்னார் மன்னர். அப்படியே செய்யப்பட, அங்கே வடக்கு நோக்கி எழுந்தருளியிருந்த பெருமாளின் திருமேனியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர். பூஜை செய்து அந்த விக்ரகத்தை எடுத்து, பெருமாள் அருளியபடியே வடக்கு நோக்கிய ஆலயம் அமைத்து, திருமலையைப் போன்றே வைகானஸ ஆகமப்படி பிரதிஷ்டை செய்து வைத்தார் கிருஷ்ண தேவராயர். ஆலயப் பராமரிப்புக்கு வேண்டிய நிலங்களை நிவந்தமாகக் கொடுத்து, நித்திய பூஜைகளைச் செய
பெருமாளே விரும்பி கோயில் கொண்ட தலம் என்னும் சிறப்போடு, வடக்கு நோக்கி பெருமாள் கோயில் கொண்டுள்ள தலம் என்னும் சிறப்போடும் இத்தலம் விளங்குகிறது.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).