🛕 Arulmigu Vedhanarayanaperumal Temple

அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில், வாழ்க்கை - 610105
🔱 Vedhanarayanaperumal

📜 About this temple

ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற் குரிய கோயிலாக போற்றப்படுகிறது. மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில், தைப்பூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி வழிபாடு செய்து வரவேண்டும். கருடன்மீது பெருமாள் அமர்ந்து காட்சி அளிக்க, மயில்மீது மால் மருகன் முருகனும் காட்சி அளிக்கும்போது உனது சாபம் நீங்கும் என்று முனிவர் கூறினார். மேலும், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் போன்ற 108 வித வாகனங்கள் செய்து இறைவனுக்குப் பெருவிழா நடத்த வேண்டும் என்றும் நல்வழி காட்டினார். முனிவர் கூறியவாறே மன்னன் பூஜைகள் நிகழ்த்தி இறைப்பணிகள் செய்து நல்லருளைப் பெற்று சிங்க முகம் நீங்கப் பெற்றான்.

பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே பெருமாளுக்கு இத்தலத்தில் நித்யகருட சேவைசாதிக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).