🛕 Arulmigu Jalakandeswar Temple

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், சேங்குன்றம், குடியாத்தம், வேலூர். - 632601
🔱 Jalakandeswarar

📜 About this temple

சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடிவிட்டது.பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு "ஜலகண்டேஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர் படையெடுப்பின்போது, இந்த லிங்கம் பாதுகாப்பு கருதி சத்துவாச்சாரி என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. 1981ல் மீண்டும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).