🛕 Arulmigu Lakshmi Narayana Perumal Temple

அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், மூஞ்சூர்பட்டு - 632057
🔱 Lakshmi Narayana

📜 About this temple

தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா, ஏன் இந்தக் கோயில் தங்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது பற்றி கூறும்போது, ""மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம். இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில் என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள். அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும்மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச் செல்வார்கள்,''என்றார். சக்தி அம்மா தரிசனம்: பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோயிலை "நாராயணி பீடம்' என்கின்றனர். இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான "சக்திஅம்மா' இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.

இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).