🛕 Arulmigu Ayyanar Temple

அருள்மிகு அய்யனார் திருக்கோயில், அந்தராசிப்பாளையம், Andharasi Palyam - 605106
🔱 Ayyanar

📜 About this temple

ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோயில் பூசாரியாக இருந்தவர் மீது ஒரு திருட்டு வழக்கு ஏற்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த திருட்டு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பூசாரி புலம்பியபடியே இருந்தார். இதைக் கவனித்த நீதிபதி பூசாரியிடம் விசாரித்தார். அதற்கு பூசாரி, அய்யா! நான் பூஜை செய்யும் கோயில் சாமிகளுக்கு இன்றைக்கு மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தெய்வங்களுக்கு மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட திருவிழாவில் சாமிகளுடன் உடனிருந்து அலங்காரம் செய்யவும், பூஜை செய்யவும் என்னால் போக முடியவில்லையே! அதை நினைத்துதான் புலம்புகிறேன். சக்தியுள்ள அந்த சாமிகள் என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச்செல்ல வருவார்கள் என்று நம்பியுள்ளேன் என்றார். அதைக் கேட்ட நீதிபதி, அவ்வளவு சக்தியுள்ளதா உங்கள் சாமி? அப்படியானால் அந்த சாமிக்கு நான் ஒரு சோதனை வைக்கிறேன். அந்த சாமிக்கு சக்தி இருந்தால் அதைக் கண்டுபிடிக்கட்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால் திருவிழா பணிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். இந்த செய்தி ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது. தென்செட்டி ஏந்தல் ஊரின் முக்கியஸ்தர்கள் எட்டு பேர் சடையப்ப சாமியை தோளில் சுமந்தபடி நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில் நீதிபதி தனது உதவியாளர்களோடு விபூதி, குங்குமம், எலுமிச்சம்பழம் ஆகிய மூன்றையும் பொட்டலமாகக் கட்டி, அருகிலுள்ள கோமுகி ஆற்றுக்குச் சென்று அங்குள்ள மணலில் புதைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார். சாமியை சுமந்தபடி நீதிமன்றம் முன்பு வந்து நின்றார்கள் தென்செட்டி ஏந்தல் சாமிதூக்கிகள். அப்போது நீதிபதி அவர்களிடம், நான் மறைத்து வைத்துள்ள பொருட்களை உங்கள் சாமி கண்டு எடுக்கட்டும் என்றார். என்ன அதிசயம்! சாமிதூக்கிகள் தங்களையும் அறியாமலேயே சாமியை சுமந்தபடி கோமுகி ஆற்றின் மணல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற சாமி ஒரு இடத்தில் மட்டும் கால்களை அழுத்தமாக ஊன்றி நிற்க, நீதிபதி புதைத்து வைத்த விபூதி, குங்குமம், எலுமிச்சம்பழம் அடங்கிய பொட்டலம் வெளியே வந்து விழுந்தது. இதைப் பார்த்து வியந்துபோன அந்த நீதிபதி திருட்டு வழக்கில் இருந்த அந்த பூசாரியை விடுதலை செய்து, மாசி மகத் திருவிழாவிற்கு பூஜை செய்ய அனுப்பி

இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள் என்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).