🛕 Arulmigu Naagavarna Perumal Temple

அருள்மிகு நாகவர்ணபெருமாள் திருக்கோயில், Nagar - 606107
🔱 Naagavarna Perumal

📜 About this temple

ஒய்மா தேசத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான் நல்லியக்கோடன் என்ற மன்னன். அவனை ஊரே புகழ்ந்தது; அவனது நல்லாட்சியைக் கண்டு ஊரே மன்னனைக் கொண்டாடியது. மக்களும் பசுக்களும் நலமுடன் வாழவேண்டும் என்று இடையறாது சிந்தித்துச் செயல்பட்டான். ஆறு-குளங்களை வெட்டினான்; கல்வி மற்றும் மருத்துவச் சாலைகளை நிறுவினான். புலவர்களை அழைத்துப் பொன்னையும் பொருளையும் வழங்கினான். சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில், பாட்டுடைத் தலைவனாகப் புகழப்பட்டிருக்கிறான் நல்லியக்கோடன். ஊரும் உலகமும் மன்னனையும் மன்னனைப் போற்றி எழுதப்பட்ட நூலினையும் தலையில் வைத்துக் கொண்டாடியது! திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கிடங்கில் எனும் பகுதியைத் தலைமை இடமாகக்கொண்ட நல்லியக்கோடனை மக்கள், அரசனாகப் பார்க்காமல் ஆண்டவனாகவே பார்த்தனர். ஆனால், அவனோ, இந்தத் தேசம் செழிப்பதற்கு இறைவனே காரணம் என்பதில் உறுதியாக இருந்ததால், கடவுளின்மீது மாறாத பக்திகொண்டிருந்தான். ஒய்மா தேசத்துக்கு உட்பட்ட இடைக்கழிநாடு, எயிற்பட்டினம், ஆமூர் மூதூர் வேலூர்,மாவிலங்கை ஆகிய பகுதிகள் நகரங்களாக வளர்ந்தன. இவற்றில், தீனசிந்தாமணி நல்லூரும் ஒன்று.

கையில் ராமாயண காவியத்தைப் படித்தபடி தரிசனம் தரும் அனுமன் இருப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).