📜 About this temple
இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழநிக்கு சென்று தண்டாயுத பாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம். ஒருநாள் தம்பிரான் தங்கை வீரலட்சுமி அம்மாள் பழநி முருகனைத் தரிசிக்கும் ஆவலைத் தெரிவித்தார். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக்காலத்தில் பழநி சென்று வரும் இன்னல்களைத் தங்கைக்கு எடுத்துரைத்தார். ஆனால் முருகப்பெருமானை தரிசிக்கப் பிடிவீதமாக இருந்து ஒரு தைப்பூச நன்னாளில் அண்ணனுடன் கிளம்பிவிட்டார். தங்கையுடன் செல்வதால் பழநி சென்றடைய காலதாமதமாகிவிட்டது. அவருக்குக் காத்திருந்தாலும் காலதாமதம் கருதி முருகன் சள்ளிதானத்தில் பூஜைகள் முடித்தனர். தாமதமாக வந்த ஆறுமுகனார் முருகப்பெருமானை தரிசிக்க இயலாததால் மிகுந்த வருத்தமுற்றார். வருடம் முழுக்க இந்நன்னாளில் உன்னை தரிசிக்க வேண்டும் உன் புகழ் பாட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் வரும் எனக்கு இன்று தரிசனம் கிட்டவில்லை. உன் முன் உள்ளம் உருகி பாடவும் இயலவில்லை. உன்பெருமைகளைப் பாட இயலாத என் நா எதற்கு? என்று கூறி தன் நாவினைத் துண்டித்தார். அவரது அளப்பரிய பக்தியைக் கண்ட தண்டாயுதபாணி ஆறுமுகனாருக்குக் காட்சியளித்து ஆறுமுகத்தம்பிரானே! கலங்காதே! உனக்குத் தனிமையில் காட்சி தரவே தாமதமாக வரவழைத்துத் திருவிளையாடல் புரிந்து சோதித்தோம். உன் மெய்யான பக்தியினால் சோதனைகளை வென்றாய். இனி எம்மைத் தரிசிக்க பழநி வர வேண்டாம். உனது ஊரான திருத்தங்கல் குன்றின் மீது எமக்குக் கோவில்கட்டி என்றும் வழிபடு. தைப்பூச நாளில் அங்கேயே காவடி செலுத்தினால் போதும், எனக் கூறி நாவினை பழைய நிலையடையச் செய்தார். ஆலயங்கட்டுமளவிற்குத் தம்மிடம் பொருள் இல்லாததை தம்பிரான் எண்ண, சென்று வா, வழி பிறக்கும், என ஆசி கூறி மறைந்தார். புதையல் : இறைதரிசனம் பெற்று பிறவிப்பயனடைந்த ஆறுமுகத்தம்பிரான் தம் தங்கையுடன் திருத்தங்கல் நோக்கி பயணமானார். இரவு துவங்கிய போது, ஓட்டன்சத்திரம் என்ற இடத்தில் தங்கினர். அங்கு சமையல் செய்ய அடுப்புக்காகக்குழி தோண்டிய பொழுது பானை ஒன்று தட்டுப்பட்டது. பானை நிறையப் பொன்னைக் கண்டு திருக்கோவில் கட்ட முருகப்பெருமானே கொடுத்த நிதி என உணர்ந்து அப்புதையலைப் பத்திரப்படுத்தினர். பின் சமைத்து உண்டுவிட்டு அயர்ந்து உறங்கினர். அவ்வேளையிலே கள்வர் கூட்டம் தம்பிரானுக்குக் கிடைத்தப் புதையலைக் களவாடிச் சென்றனர். சில அடி
அர்ச்சுனனால் உருவாக்கப்பட்ட அர்ச்சுனா நதி
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).