🛕 Arulmigu Mathang Kovil Temple

அருள்மிகு மாதாங்கோயில், எஸ். கொடிக்குளம் - 626133
🔱 Mathangi

📜 About this temple

அகிலத்தை அன்பால் ஆளும் அன்னை ஆதிசக்தியானவள் <உலகத்தில் பல்வேறு இடத்தில் தனக்கென்று ஒரு உருவம் தானே கொண்டு, பக்தர்களுக்கு காட்சி தந்து தனது சக்தியை நிலைநாட்டி அருள்பாலித்து வருகிறாள். ஆதிசக்தியானவள் அன்னை மாசானி என்ற பெயரில் தமக்கென்று ஒரு உருவம் கொண்டு ஐம்பொன்னில் அமைந்து விருதுநகர் மாவட்டம், எரிச்சநத்தம் கிராமத்தில் மாசானக் கோட்டையில் உருவாகி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறாள். பக்தர்கள் வேண்டுதல்படியும் செட்டியபட்டியில் கொடுத்த உத்தரவின்படியும் 14.9.2003ல் எரிச்சநத்தம் குளக்கரையில் அமைந்துள்ள ஆமணச்சி அம்மன் கோயிலில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பூஜையில் மாசானி அம்மன் கோயில் கட்டுவதற்கு மாசானி அம்மன் அருளடியார் அருளோடு தற்பொழுது அமைந்துள்ள ஆதிசக்தி அன்னை மாசானி அம்மன் தியானேஸ்வரர் பீடம் அமைந்த இடம் காண்பிக்கப்பட்டது. 2004 வருடம் ஆடி மாதம் 1ம் தேதி மாசானி அம்மன் ஐம்பொன்சிலை செய்வது என முடிவு செய்யப்பட்டு சிலையானது, தேனி பாரஸ்ட் 5வது தெருவில் அமைந்துள்ள அன்னை மாசானி அம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் வைத்து உருவாக்கப்பட்டது. 2004ம் வருடம் ஆடி மாதம் 32-ம் நாள் அமாவாசை அன்று அம்மன்சிலை வடிவம் பூர்த்தி செய்யப்பட்டது. உருவாக்கிய அம்மன் சிலையை அம்மனுக்காக செய்யப்பட்ட மரப்பெட்டியில் வைத்து 6 மாதம் வழிபாடும் நடத்தப்பட்டது. 2004ம் வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி அன்னை மாசானி அம்மனுக்கும் எரிச்சநத்தம் கிராமத்தில் கோட்டை எழுப்ப வாஸ்து பூஜை நடத்தப்பட்டது. பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்த மாசானி அம்மன் சிலையை 2005ம் வருடம் தை மாதம்1ம் தேதி கண் திறந்து பூஜை வழிபாடு செய்து வெளியே எடுக்கப்பட்டது. அவ்வாறு வெளியே வந்த மாசானி அம்மன் ஐம்பொன் சிலையை அன்றே தேனியில் இருந்து மேளதாளத்துடன் ஆண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி, செட்டியபட்டி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து எரிச்சநத்தம் மாசானக்கோட்டையில் அம்மனின் திரு உருவச்சிலையை பிரதிஸ்டை செய்யப்பட்டது.

அம்மன் ஐம்பொன் திருஉருவம்: மாசானி அம்மன் கோட்டை உருவாவதற்கு முன் முதன் முதலாக ஐம்பொன்னில் சிலையாக உருவாக்கப்பட்டு கருவறையின் மேற்குபுறம் கீழ்தளத்தில் வடக்கு நோக்கி ஐந்து தலை நாகனுள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். விழாக்காலங்களில் தேரில் உலா வருவதும் சித்திரை மாதம் நடைபெறும் சிறப்பு பூஜையில் அம்மன் குளக்கரைக்குச் சென்று நீராடி 16 அபிஷேகம் செய்து எடுத்து யாகத்தில் வீற்றிருந்து அருள்புரிவதும் இந்த அம்மனின் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).