🛕 Arulmigu Nintra Narayana Perumal Temple

அருள்மிகு நின்றநாராயணப்பெருமாள் திருக்கோயில், Thiruthangal - 626130

📜 About this temple

பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,""மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால் தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்,''என்று புகழ்பாடினர். பூமாதேவியின் தோழியரோ,""இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராஹ அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்,''என்று பாராட்டினர். நீளாதேவியின் தோழிகள்,""எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள். தண்ணீரை "நாரம்' என்பர். இதனால் தான் பெருமாளுக்கு "நாராயணன்' என்ற சிறப்பு திருநாமமே ஏற்பட்டது. உலகிலுள்ள எல்லாரும் உச்சரிக்கும் நாமம் நாராயண நாமம். தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச்செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள்,'' என்றனர். விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் "திருத்தங்கல்' என்ற பெயர் ஏற்பட்டது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 91 வது திவ்ய தேசம்.இது ஒரு ுடைவரைக்கோயிலாகும்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).