📜 About this temple
உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் பழம்பெருமை மிக்கது. ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள். ஈசனை தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து, ""நான் மண்டோதரிக்கு காட்சிதர செல்கிறேன். திரும்ப வரும் வரை இதை பத்திரமாக வைத்திருங்கள்,'' என கூறிச்சென்றார். மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதை புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப் பற்றி எரிந்தன. சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது " அக்னி தீர்த்தம்' என பெயர்பெற்றது. அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலை காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார். மாணிக்கவாசகருக்கு தன்னைப்போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.
இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம். ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).