🛕 Arulmigu Aradi Vinayagar Temple

அருள்மிகு  ஆறடி  விநாயகர்  திருக்கோவில், காவல் நிலையம் அருகில், Tharamangalam - 636502
🔱 Aradi Vinayagar

📜 About this temple

சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன் படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப் போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். இவ்வாறு மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியை துவங்கினான். இவரே கோயில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டான். அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.

இத்தல விநாயகர் தலையை ஆட்டும் விதமாக இடதுபக்கம் தலைசாய்த்தபடி உள்ளார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).