🛕 Arulmigu Elameeswaran Temple

அருள்மிகு  இளமீஸ்வரன்  திருக்கோவில் , Tharamangalam - 636502
🔱 Elameeswaran

📜 About this temple

தாருகாவனத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த கெட்டிமுதலி என்ற குறுநில மன்னன், ஒரு காலத்தில் இப்பகுதிக்கு வந்தான். இங்குள்ள வனப்பகுதியைக் கண்டதும் வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது. நீண்ட நேரம் வனத்திற்குள் சுற்றியும் விலங்குகள் எதுவும் கண்ணில் தட்டுப்படவில்லை. களைப்படைந்த மன்னன் ஒரு இடத்தில் அமர்ந்தான். அவனுடன் சென்ற சேவகர்கள், மன்னனின் குதிரையை ஒரு இடத்தில் கட்ட முயன்றனர். குதிரையோ அந்த இடத்தில் நிற்காமல் தாவிக்குதித்து வேறிடத்தில் போய் நின்றது. அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது என ஆய்வு செய்தபோது ஏதும் புலப்படவில்லை. உடனே அந்த இடத்தை தோண்ட உத்தரவிட்டான். பூமிக்கடியில் ஒரு லிங்கம் இருந்தது. பரவசமடைந்த மன்னன், அந்த சுயம்புலிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினான். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).