🛕 Arulmigu Agastheeswarar Temple

அருள்மிகு அகஸ்தீஸ்வரசாமி திருக்கோயில், கொடியலூர் - 609405

📜 About this temple

இறைவன் திருமணக்கோலம் காண்பதற்கு அகத்திய முனிவர் இங்கு தவம் செய்தார் எனக்கூறப்படுவதுடன் இங்கு மூலவருக்கு அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பெருவேளுரில் அம்பிகை அபின்ன நாயகியாகத் தவக்கோலம் கொண்டு இறைவனை மணம்புரியத் தவம் செய்த போது, திருக்கரவீரத்தில் திருமணம் நடந்தது. இதை நினைவு கூறும் வகையில் சுவாமிக்கும் வலபக்கம் அம்பிகை சன்னிதி உள்ளது. பின்னர் ராப்பட்டீசுவரத்தில் உள்ள அந்தபுரத்தில் ஓர் இரவு தங்கி கயிலைக்கு சென்றதால் அந்த அம்மன் அந்தப்புரநாயகி என்ற பெருமை இத்தலத்திற்கும் பெருமை சேர்க்கிறது. அந்த திருமணத்திற்கு பந்தல் கால் நட்டது மணக்கால் என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர். ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் இத்தலத்தை வைப்பு தலமாக பாடியுள்ளார். சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவன்கோயில்கள் 108 - இல் இதுவும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுகள் அதிகளவில் அழிந்துள்ளதால் வரலாறுகள் தெரியவில்லை. பிறத்தகவல்கள்: அகத்திய முனிவர், திருநாவுக்கரசர் இத்தலத்தின் அருகில் உள்ள பெருவேளூரைப் பாடியிருப்பதாலும், திருவாரூர் பதிகத்தில் இத்தலத் தின்பெயரை வைத்துப்பாடியிருப்பதாலும், அப்பர் பெருமான் மணக்காலை தரிசித்துப் பாடியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. சோழர்கால கோயில்களில் இதுவும் ஒன்று, இக்கோயில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கிடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் தியாகேஸ்வரி என்ற பெண் மணியின் முயற்சியால் கோயில் புதுப்பித்து குடமுழுக்கு செய்யப் பட்டுள்ளது.

தை மாதத்தில் மாலையில் சூரிய அஸ்தமத்தின் போது, சூரிய ஒளிக் கதிர்கள் சுவாமியின் மீது விழும் நேரத்தில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).