📜 About this temple
அண்டத்தில் இருந்து செயல்படும் பிண்டமான பூமி, நீரில் அடங்கி, பூமி, நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர்,நெருப்பு மூன்றும் காற்றில் அடங்கி, இவை நான்கும் ஆகாயத்தில் அடங்கி, ஒடுங்கி செயல்படும் என்பதை பரவெளியில் நின்று கண்டவர்களை முனிவர்கள். இதை உணர்த்தும் விதமாக சிவபெருமான் பஞ்ச பூதங்களின் குருவான குறுமுனிவர் அகஸ்தியரை அழைத்து திருக்கயிலையில் தனக்கும் பார்வதி தேவிக்கும் நடக்கும் திருமணத்தை காண மூவுலத்தவரும் மிக அதிகமாக வருகை தந்து இருப்பதால் இமயமலை தாழ ஆரம்பித்து வட திசை தாழ்ந்தும் தென் திசை உயர்ந்தும் வர தொடங்கியது. எனவே தாங்கள் தென்திசை சென்று பூமியை சமமாக்க வேண்டும் என ஈசன் உத்தரவிடுகிறார். அதற்கு அகஸ்தியர் உடன் தென் திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் தங்கள் திருமண காட்சியை தரிசித்து செல்கிறேன் என்றார். அதற்கு ஈசன் என் திருமணம் வரை இங்கு நீ இருந்தால், இமயமலை இருக்கும் இடத்தில் கடல் தான் இருக்கும் எனவே விரைவில் பொதிகை நோக்கி செல்லுங்கள் இங்கு நடக்கும் திருமண நிகழ்வை தெற்கே வந்து காட்சி தருகிறோம் என கூறி குறுமுனியை தெற்கு நோக்கி அனுப்புகிறார். அதன் பின் அகஸ்திய முனிவர் செல்கிறார். செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே ஈசனை நினைத்து வணங்கி செல்கிறார். அதன்படி இப்பகுதியில் அகஸ்தியர் ஈசனை பூஜித்த இடம் என்பதால் இப்பகுதியில் சோழர் வம்சத்தில் கட்டப்பட்ட 108 சிவன் கோயில் ஒன்றாக கட்டப்பட்டது. கோயில் பராமரிப்பில்லாமல் முற்றிலும் முட்புதர்கள் மண்டி காடுபோல் இருந்தது. அப்பகுதியினர் இந்துசமய அறநிலையத்துறை அனுமதியுடன் புதிதாக கோயில் கட்டி முற்றிலும் புதிய விக்கிரகங்கள் அமைத்து 2014 பிப்ரவரி 9ம்தேதி கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்.
ஈசன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள விக்கிரகங்களுத்து அனைத்து அபிஷேகங்களும் செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் சிதிலமடைந்து கிடந்த இக்கோயிலுக்கு திருப்பணி மகான் அருட்சித்தர் பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் பாலஸ் தாபனம் செய்தார் என்பது சிறப்புக்குரியவையாகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).