📜 About this temple
பரம்பொருளாகிய இறைவனுக்கு பரத்தும், வ்யூகம், அந்தர்யா மித்வம், வாவம், அர்ச்சை, என்ற ஐந்து நிலைகளில் உள்ளன. பரத்துவம் என்பது பரமபதத்தில் எழுந்தருளி இருக்கும் நிலை. வ்யூகம் என்பது திருப்பாற்கடலில் எழுந்தருளி இருக்கும் நிலை. அந்தர்யா மித்வம் என்பது ராமகிருஷ்ணாதி அவதாரங்களை குறிக்கும் நிலை. அந்தர்யாமித்வம் என்பது ராமகிருஷ்ணாதி அவதாரங்களை குறிக்கும் நிலை எல்லா இடங்களிலும் சகல வஸ்துக்களிலும் எள்ளினுள் எண்ணை போல் மறைந்து இருப்பது அடியார்களின் மனதில் வீற்றிருப்பதும் இதில் அடங்கும். உபாச கானாம் கார்யார்த்தம் ரூப கல்பனா என்ற முறைப்படி எங்கும் நிறைந்தவன் கோயில்களில் உள்ள மூர்த்திகளில் அருந்தன்மையுடன் விளங்குவதாகிய அர்ச்சை நிலையே சிறந்ததாக சான்றோர் கூறுவர். கலியுகத்தில் மனித சிரமங்களுக்காகவும், தெய்வம் அர்ச்சை நிலை என்ற உருவ வழிபாடு என்றும் சொல்வர். உருவ வழிபாட்டில் நின்ற திருக்கோலம். பள்ளி கொண்ட(சயன) திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம் என்ற மூன்று வகையில் பெருமாள் ஆங்காங்கு எழுந்தருளி உள்ளார். இந்த கோயிலில் மூலவரும் உற்சவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். பிரதாப சிம்ம மகாராஜா 1739-ம் ஆண்டு முதல் 1763-ம் ஆண்டில் அவருடைய காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் கீர்த்தி மானாக விளங்கியவர் வெங்கோஜியின் புதல்வர். இ வர் 24 ஆண்டுகள் அரசு புரிந்துள்ளார். படிப்படியாக கோயில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. 1924-ம் ஆண்டு சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. 1956-ம் ஆண்டு மகா சம்ப்ரோஷனம் நடந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மறுவியுள்ளது. (1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது)
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).